ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அச்சத்தில் நத்தார் கொண்டாடும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்

Image caption தேவாலய காவலில் பாதுகாப்புச் சிப்பாய்

பாகிஸ்தானில் தேவாலயம் ஒன்றில் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 80 க்கும் அதிகமனோர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு நத்தார் காலத்தில் தேவாலயங்களில் ஆயுதப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கடந்த 66 வருட கால சரித்திரத்தில் பெஷாவாரில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல், அங்குள்ள கிறிஸ்தவ சமூகம் எதிர்கொண்ட மிகவும் கொடூரமான தாக்குதலாகும்.

அந்த நகரின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயும் பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.