ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இலங்கைப் போரில் ஏகே 47 பயன்பாடு'

  • 24 டிசம்பர் 2013
Image caption ஏகே 47 துப்பாக்கியுடன் இருக்கும் சிறார் போராளி

மூன்று தசாப்தங்கள் நீண்ட இலங்கையின் உள்நாட்டுப் போரில் ஏகே 47 துப்பாக்கி முக்கிய ஆயுதமாக இரு தரப்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிகள் இந்தியாவில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு முதலில் கிடைத்ததாகவும், பின்னர் சர்வதேச கள்ளச் சந்தையில் இருந்து அவை வாங்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் ராகவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை இராணுவமும் ஏகே 47 மற்றும் அதன் சீனப் பிரதியான டி 56 ஐ அதிகமாக பயன்படுத்தியது.