தனியே : ஒரு அமைதித் தீவு...
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: தனியே ஓர் அமைதித் தீவு...

பசுபிக் சமுத்திரத் தீவான பால்மேர்ஸ்டன் என்பது உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இடம்.

வருடத்தில் இரு தடவைகள்தான் அங்கு விநியோகக் கப்பல்கள் போகும்.

சீற்றம் மிக்க கடலில் அங்கு பயணிப்பது மிகவும் ஆபத்தான ஒரு விசயம். அதனால், அங்கு செல்பவர்கள் மிகவும் குறைவு.

குக்ஸ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான டைனி பால்மேர்ஸ்டனில், 62 பேர்தான் வாழ்கிறார்கள்.

அவர்களில் மூன்று பேரைத் தவிர ஏனைய அனைவருமே, இங்கிலாந்தில் இருந்து 150 வருடங்களுக்கு முன்னதாக அங்கு குடியேறிய வில்லியம் மார்ஸ்டர்ஸ் என்பவரின் வாரிசுகள்தான்.

குடும்பத்துக்குள்ளேயே திருமணம் செய்வதால், அந்த மக்கள் தொகை அழிவின் விழிம்பில் இருக்கிறது.

இருந்தாலும் எந்தவிதமான வன்செயலும், கெடுபிடிகளும், போக்குவரத்து நெரிசல்களும் இல்லாத ஒரு அமைதித் தீவு அது.

காணொளியைப் பாருங்கள்.