மத்திய ஆப்பிரிக்க குடியரசில் மத வன்செயல்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் மத வன்செயல்கள் - காணொளி

  • 18 ஜனவரி 2014

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ஒரு மாதத்துக்கும் அதிகமாக வன்செயல்கள் நடந்துவரும் நிலையில், கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையிலான மதப் பிளவு, அங்கு இன்னமும் பதற்றத்தை உச்ச நிலையில் வைத்திருக்கிறது.

கிறிஸ்தவ ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் நிலையில், வடபகுதி நகரங்களில் வாழும் முஸ்லிம்கள், அண்டை நாடானா சாட் நாட்டுக்கு பாதுகாப்புக்காகக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

இடைக்கால அதிபர் பதவி விலகியதை அடுத்து கடந்த வாரத்தில் வடமேற்குப் பகுதியில் உள்ள ''போசோம்'' நகரில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் பெரும்பாலும் முஸ்லிம்களைக் கொண்ட முன்னாள் செலிக்கா தீவிரவாதிகளால் எரிக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் பொதுமக்களை கிறிஸ்தவ தீவிரவாதிகள் தேடி வேட்டையாடிவரும் நிலையில், அங்கு பிரஞ்சுப் படைகளும் அனுப்பப்படாததால், பெரும் மனிதப் படுகொலை நடக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

போசோமில் இருந்து தோமஸ் ஃபெஸ்ஸி அவர்கள் அனுப்பிய காணோளி.