உக்ரைனில் பெரும் வன்முறை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உக்ரைனில் பெரும் வன்முறை - காணொளி

உக்ரைனின் தலைநகர் ''கியெவ்'' இல் உள்ள நகர மையத்தில் உள்ள தடைகளுக்கு அப்பால் பொலிஸார் போராட்டக்காரர்களை அகற்ற முயன்ற நிலையில், அங்கு மேலும் வன்முறைகள் உருவெடுத்துள்ளன.

போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசித் தாக்கினார்கள். அதற்குப் பதிலடியாக பொலிஸார் ரப்பர் தோட்டாக்கள், சத்த வெடிகுண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகை ஆகியவற்றை பயன்படுத்தினார்கள்.

உக்ரைன் கடந்த நவம்பரில் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியதன் பின்னர் முதலாவது உயிர்ப்பலியாக, முன்னதாக இரு போராட்டக்காரர்கள் பலியானார்கள்.

போராட்டங்களுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த தினத்தில் இந்த வன்செயல்கள் நடந்துள்ளன.

ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தும் ஒரு நகர்வாக, அதிபர், விக்டர் யனுகோவிச் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு பங்காளி உடன்படிக்கையை நிராகரித்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.