ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலியல் துஷ்பிரயோகம்: திருச்சபை நிலைப்பாடு சரியா?

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில், சிறுவர், சிறுமியரைப் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பாதிரியார்களை திருச்சபை பாதுகாக்கிறது என்று ஐ.நா மன்றத்தின் சிறார் உரிமைப் பாதுகாப்புக் குழு குற்றம் சாட்டியிருந்தது. இது தவிர, கருக் கலைப்பு, கர்ப்பத்தடை, ஒருபாலுறவு போன்ற விஷயங்களிலும் , திருச்சபையின் நிலைப்பாட்டை அது விமர்சித்திருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க சமூகம் என்ன நினைக்கிறது என்று அகில இந்திய கத்தோலிக்க மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த அருட்திரு ஹென்றி ஜெரோம்