குவாண்டனாமோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குவாண்டனாமோ விடுதலையின் பின்னர் ...

படத்தின் காப்புரிமை AP
Image caption குவாண்டனாமோ

குவாண்டநாமொ குடாவில் உள்ள இராணுவ தளத்தில் இருக்கும் தடுப்பு முகாமை மூடுவேன் என்ற தனது உறுதிமொழியை அதிபர் ஒபாமா இன்னமும் நிறைவேற்றாவிட்டாலும், அங்கு தடுத்து வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது.

முன்னர் 800 பேர் இருந்த நிலை மாறி அங்கு இப்போது சுமார் 150 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இறுதியாக கியூபாவில் உள்ள அந்த முகாமை இந்த வருடத்தில் எப்படியாவது மூடுவேன் என்று ஒபாமா கூறுகிறார்.

ஆனால், அங்கு இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களின் இன்றைய நிலை மிகவும் சோகமாகவே இருக்கிறது.

அங்கிருந்து விடுதலையாகி தமது சொந்த ஊரான ஆப்கானிஸ்தானில் தமது மறுவாழ்வை தொடங்கியுள்ள சிலரின் கதை குறித்து ஆராயும் பிபிசியின் செய்திப் பெட்டகம்.