"இழுவை மீன்பிடி வலைகளே கடல் ஆமைகளின் முக்கிய இன்னல்"

"இழுவை மீன்பிடி வலைகளே கடல் ஆமைகளின் முக்கிய இன்னல்"

கடல் ஆமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சுப்ரஜா தாரினி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டக் கடலோரப் பகுதியில் ஒரு சில நாட்கள் முன்பாக எண்ணூறுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் செத்துக் கரையொதுங்கியுள்ளன.

தற்போது நடந்துள்ள சம்பவத்திலும் கடல் ஆமைகள் இழுவை வலைகளில் சிக்கி இறந்துள்ளதாகவே விசாரணைகளில் தெரிவதாக ட்ரீ ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சுப்ரஜா தாரினி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

கடலோரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர்கள் தாண்டியே இழுவை வலைகளைப் பயன்படுத்த வேண்டும் என ஆந்திர மீன்பிடி விதிகள் கூறினாலும், அப்படியான விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்று சுப்ரஜா தாரினி தெரிவித்தார்.

ஆமைகள் சிக்காமல் வெளியேறுவதற்குரிய கருவிகள் இழுவை வலைகளில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற விதியும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

மீனவர்கள் மத்தியில் விதிகளைக் கடைப்பிடிக்கும் மனப்பாங்கும், விழிப்புணர்வும், சுற்றாடலைப் பேண வேண்டும் என்ற அக்கறையும் வளர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.