புதைகுழி இருக்கும் இடத்தில் அதிகாரிகள் கலந்தாலோசிக்கிறார்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மன்னார் புதைகுழி தோண்டும் பணிகள் நிறுத்தம்

Image caption புதைகுழி இருக்கும் இடத்தில் அதிகாரிகள் கலந்தாலோசிக்கிறார்கள்

மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் மாந்தை வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆயினும் இந்தப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்ற காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றார்.

குடிநீர் விநியோகத்திற்கான குழாய்களைப் பதிப்பதற்காகத் நிலத்தைத் தோண்டியபோது வெளிப்பட்ட மனித எலும்புகள் உள்ளிட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய கடந்த டிசம்பம் மாதம் 20 ஆம் திகதி முதல் 32 நாட்கள் இந்தப் புதைகுழி தோண்டப்பட்டிருக்கின்றது.

முப்பத்து மூன்றாவது நாளாகிய புதன்கிழமையன்று மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்னம் தலைமையில் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்கள அதிகாரிகள், இரகசிய பொலிசார், குற்றவியல் பொலிஸ் பிரிவினர், சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆரய்வதற்காகக் கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் கூறியிருக்கின்றார்.

இவை குறித்து எமது வவுனியா செய்தியாளர் மாணக்கவாசகம் அவர்கள் வழங்கும் செய்திக்குறிப்பை இங்கு கேட்கலாம்.