மலேசிய விமானத்தின் கதி குறித்த குழப்பம் தொடர்கிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலேசிய விமானத்தின் கதி குறித்த குழப்பம் தொடர்கிறது - காணொளி

காணாமல் போன மலேசிய விமானத்தின் கதி தெரியாத நிலை தொடர்வதால் பயணிகளின் உறவினர்கள் பெரும் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள்.

பத்து நாட்களுக்கு முன்னதாகக் காணாமல் போன மலேசியன் ஏர் லைன்ஸின் எம். எச்.370 விமானத்தை சீனா தனது பிராந்தியத்தில் தேடத் தொடங்கியுள்ளது.

விமானம் கடைசியாகக் காணப்பட்டதாக அறியப்படும் இடத்துக்கு வடக்கு மற்றும் தெற்காக வான் பரப்பிலும், நிலத்திலும் பெரும் பரப்பில் தேடுதல் நடக்கிறது.

அதில் பயணம் செய்த சீன குடிமக்களில் எவரும் பயங்கரவாத தொடர்பு உள்ளவர்களாகத் தென்படவில்லை என்று சீனா கூறுகின்றது.

கோலாலம்பூரில் இருந்து பிபிசியின் ஜொனா ஃபிஸ்ஸர் அனுப்பிய காணொளிச் செய்திக்குறிப்பு.