கபில் சிபல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மணமானவர் மோடி: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கபில் சிபல்

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி முதல் முறையாக, தான் திருமணமானவர் என்பதை தனது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளது தொடர்பில் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கபில் சிபல் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

மோடி தனது ஆட்சியில் குஜராத்தில் பெண்களின் பாதுகாப்பை சிறப்பாக உறுதிப்படுத்தியதாக பாரதிய ஜனதா கூறி வரும் நிலையில், அதை வைத்து அவர் பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் பின்னணியில், தனது சொந்த மனைவியின் பெயரை குறிப்பிடுவதற்கு அவர் இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்டது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவரை நரேந்திர மோடி தனது திருமணம் குறித்து எந்த தகவல்களையும் வேட்பு மனுவில் குறிப்பிடாமல் இருந்ததற்கு, தேர்தல் ஆணையம் வழிமுறைகளில் ஏதேனும் அனுமதி வாழங்கப்பட்டதா? என்பது தொடர்பில் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பிபிசிக்கு அளித்த செவ்வியுடன் கூடிய செய்திக் குறிப்பை நேயர்கள் இங்கே கேட்கலாம்.