இரு முன்னாள் போப்பாண்டவர்கள் புனிதர்களாக பிரகடனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரு முன்னாள் போப்பாண்டவர்கள் புனிதர்களாக பிரகடனம் - காணொளி

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமாம் வத்திகானத்தில் இதற்கு முன்பெப்போதும் இல்லாத விதமாக நடந்த ஒரு வைபவத்தில், முன்னாள் போப்பாண்டவர்களான 23ஆம் ஜான் அவர்களையும் இரண்டாம் ஜான் பால் அவர்களையும் இந்நாள் பாப்பரசரான பிரான்சிஸ் புனிதர்களாக அறிவித்துள்ளார்.

சரித்திரத்தில் முதல்முறையாக இரண்டு போப்பாண்டவர்கள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்படுகின்ற இந்த வைபவத்தில் பிரான்சிஸுக்கு முன்பாக போப்பாண்டவராக இருந்த பெனெடிக்டும் கலந்துகொண்டுள்ளார்.

புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் போப்பாண்டவர்களின் பெரிய உருவப்படங்கள் வத்திகானத்திலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தை அலங்கரித்துள்ளன.

அங்கும் சுற்றியுள்ள வீதிகளிலுமாக ஏராளமான மக்கள் கூடி சிறப்பு திருப்பலி பூசையில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலும் இருந்தும் பல லட்சம் கத்தோலிக்கர்கள் ரோம் நகருக்கு வந்துள்ளனர்.

தவிர கோடிக்கணக்கானோர் இந்த வைபவத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்த்துவருகின்றனர்.

இவை குறித்த ஒலிக்குறிப்பற்ற ஒரு காணொளி.