விபத்தை அடுத்து மலையேறலை ரத்துச் செய்த வழிகாட்டிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விபத்தை அடுத்து மலையேறலை ரத்துச் செய்த வழிகாட்டிகள் - காணொளி

இமயத்தில் இவ்வருடத்துக்கான மலையேறலை நேபாளத்தின் ஷெர்ப்பா வழிகாட்டிகள் ரத்துச் செய்ததை அடுத்து மலையேறிகள் எல்லாம், எவரெஸ்டின் அடிவார முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

9 நாட்களுக்கு முன்னதாக பெரும் பனிச்சரிவில் கொல்லப்பட்ட 16 ஷெர்ப்பாக்களின் ஞாபகார்த்தமாக அவர்கள் இதனை செய்கிறார்கள்.

தனது சகா, பனியின் அடியில் புதைந்து இறந்ததை நேரில் பார்த்த ஒருவர், தான் இனி என்றும் மலையேறச் செல்லமாட்டேன் என்று பிபிசியிடம் கூறியுள்ளார்.

காத்மாண்டுவில் இருந்து பிபிசியின் செய்தியாளர் யோகித்தா லிமாயி அனுப்பிய காணொளி.