மே தின ஊர்வலங்களும் கலவரங்களும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மே தின ஊர்வலங்களும் கலவரங்களும் - காணொளி

உலகின் பல பாகங்களிலும் மே தின ஊர்வலங்கள் நடந்துள்ளன.

பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அவற்றில் கலந்துகொண்டனர்.

ரஷ்யா, தென்கொரியா, வங்கதேசம், துருக்கி, இலங்கை போன்ற பல நாடுகளில் மே தின ஊர்வலங்கள் நடந்துள்ளன.

வங்கதேசத்தில், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த வருடம் இடிந்த ஆடைத்தொழிற்சாலைக் கட்டிட விபத்தை முன்வைத்து மே தின ஊர்வலத்தை நடத்தினார்கள்.

துருக்கியில் நடந்த ஊர்வலம் கலவரமாக மாறியது.

செஞ்சதுக்கத்தில் ஊர்வலம்

சோவியத் ஒன்றியம் 90 களில் உடைந்துபோவதற்கு முன்னதாக இருந்த பாரம்பர்யத்தை மீள ஏற்படுத்தும் வகையில், மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில், மே தினத்தை முன்னிட்ட தொழிலாளர் அணிவகுப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

தொழிற்சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆளும் ஐக்கிய ரஷ்யக் கட்சியின் உறுப்பினர்களும் அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

சிலர் ''பூட்டினே சரியானவர்'' என்று கூறும் பதாதைகள் மற்றும் சோவியத் கொடிகளை தாங்கிச் சென்றனர்.

சோவியத் நாட்காட்டியில் ''மே தினம்'' என்பது மிகவும் முக்கியமான நாளாகும்.

இது ஒரு பாசிச எதிர்ப்பு நாளாகுவும் அனுட்டிக்கப்படுவதாக ரஷ்ய சுயாதீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் கூறியுள்ளார்.

இவை குறித்த பிபிசியின் ஒலிக்குறிப்பற்ற காணொளியை இங்கு காணலாம்.