இணைய பாலியல் பணம் பறிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இணைய பாலியல் பணம் பறிப்பு - காணொளி

உலக மட்டத்தில் பாலியல் ஆசை காட்டி பணம் பறிக்கும் ஒரு கும்பலை பிலிப்பைன்ஸ் போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

இணையத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் பலருக்கு பாலியல் ரீதியாக ஆசைகாட்டி அவர்களை பின்னர் மிரட்டி இந்தக் குழு பணம் பறித்து வந்துள்ளது.

முதலில் இளம்பெண்கள் போல பேசி, அவர்களை வெப்கம் மூலம் தொடர்புகொண்டு அவர்களுக்கு அரைகுறை ஆடையில் இருக்கும் படங்களை காட்டி அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களையும் படம்பிடித்து, இந்தக் கும்பல் அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளது.

ஆனால், இதனால், பாதிக்கப்பட்ட, ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த டானியல் பெர்ரி என்னும் 17 வயதுச் சிறுவன் தற்கொலை செய்துகொண்டதால், சர்வதேச போலிஸார் இந்த விடயம் குறித்து தீவிரமாக புலனாய்வு செய்து இந்தக் குழுவை தேடியுள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.