சீனாவில் இரட்டையர் திருவிழா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனாவில் இரட்டையர் திருவிழா - காணொளி

ஆயிரத்துக்கும் அதிகமான இரட்டையர் ஜோடிகள் சீனாவின் யுனான் மாகாணத்தில் ஒரு திருவிழாவுக்காக கூடியுள்ளார்கள்.

சீனாவில் இரட்டையர் மிகவும் சிறப்பானவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

சீனாவின் வீட்டுக்கு ஒரு குழந்தை மாத்திரம் என்ற திட்டத்தின் கீழ் இரட்டையர்களுக்கு மாத்திரம் விலக்கு இருக்கிறது.

ஆகவே சீனக் குடும்பங்கள் இரட்டைக் குழந்தைகளை அதிர்ஸ்டமானவையாக பார்க்கின்றன.

இந்த திருவிழாவின் ஒரு அம்சமாக இரட்டையர்கள் தமக்கு கண்ணுபட்டுவிடக் கூடாது என்பதற்காக கறுப்பு நிறத்தை பூசிக் கொண்டு காட்சி தருவார்கள்.

அந்த திருவிழாவின் சில காட்சிகள் பிபிசியின் காணொளியில்.