ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வான்மழையுடன் பொழிந்த மீன்மழை- காணொளி

இலங்கையில் மாதம்பை கலஹிட்டியாவ பிரதேசத்தில் திங்கட்கிழமை வழமையான மழையோடு மீன் மழையும் பொழிந்துள்ளது.

பனையேரிக் கெண்டை எனப்படும் இந்த நன்னீர் மீன்கள் 3 அங்குலம் முதல் 5 அங்குலம் வரை நீளமானவை என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

மழையில் கொட்டிய மொத்தம் 50 கிலோ வரையான கெண்டை மீன்களை மக்கள் பாத்திரங்களில் அள்ளிச் சென்றதாக அவர்கள் கூறினார்.

கடுமையான காற்றுடன் கூடிய மழையில் அள்ளுண்டு சென்ற மீன்கள் இப்படி தரையில் மழையாக பொழிந்ததாக பீடிஏ சந்திரசிறி என்ற மாதம்பை பிரதேச வாசி கூறினார்.