கல்வித் தர வரிசையில் முதல் நான்கும் ஆசிய நாடுகளே
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கல்வித் தர வரிசையில் முதல் நான்கும் ஆசிய நாடுகளே - காணொளி

உலகில் சிறந்த கல்வியை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் நான்கு இடத்தையும் ஆசிய நாடுகளே பெற்றிருக்கின்றன.

தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் ஆகியவையே முறையே முதல் நான்கு இடத்தையும் பெற்றிருக்கின்றன.

ஐந்தாவது ஆறாவது இடங்களை ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகியன பெற்றிருக்கின்றன. அமெரிக்காவுக்கு 14வது இடம்.

கல்வி மற்றும் பிரசுர நிறுவனமான பியர்சன் அமைப்பால் கணிக்கப்பட்ட, இந்த தரப்பட்டியல், உயர் கல்வி மற்றும் சர்வதேச பள்ளிக்கூடப் பரீட்சைகளையும் உள்ளடக்கியதாகும்.

நான்காவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட இந்த தரப்பட்டியல், ஆசிய நாடுகளில் கல்வி முறைமை வளர்ச்சியடைந்து வருவதாக வலியுறுத்துகிறது.

இவை குறித்த காணொளி.