ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கறுப்புச் சந்தையில் யானைக் குட்டிகளுக்கு அமோக விலை: அமைச்சர்

Image caption அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா

இலங்கையில் காடுகளிலிருந்து கடத்தப்படும் யானைகளை மீட்பதற்காக அதிகாரிகள் தேடுதல் வேட்டைகளில் இறங்கியுள்ளதாக வன உயிர் பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

யானைகளைக் கண்டுபிடிப்பதற்காக டிஎன்ஏ சோதனைகளை அதிகாரிகள் நடத்துவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தந்தம் உள்ள யானைக் குட்டி ஒன்று கறுப்புச் சந்தையில் 4 கோடி ரூபா வரை விற்கப்படுவதாகவும் தந்தம் இல்லாத யானைக்குட்டிகள் ஒன்றரை கோடி ரூபா வரை விலைபோவதாகவும் அமைச்சர் கூறினார்.