போராட்டக்காரரை தாக்கிய துருக்கிய பிரதமர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போராட்டக்காரரை தாக்கிய துருக்கிய பிரதமர் - காணொளி

துருக்கியில் சுரங்க விபத்து நடந்த இடத்துக்குச் சென்ற துருக்கிய பிரதமர் ரெசெப் தையிப் எர்தோவன் அவர்கள், அங்கு ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

விபத்து நடந்த சோமா நகருக்கு சென்ற அவரை சுற்றவர போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினார்கள்.

விபத்து நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீட்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

அங்கு வந்த போராட்டக்காரர் ஒருவரை முதலில் பிரதமர் தள்ளிவிட, பின்னர் அவரது உதவியாளர்கள் அவரை தாக்கியுள்ளனர்.

அது குறித்த காணொளி.