ஆப்கானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்கானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல் - காணொளி

ஆப்கானிஸ்தானில் ஹெரட் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை ஆயுதபாணிகள் தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கடுமையான சண்டை நடந்துள்ளது.

அந்த ஆயுதபாணிகள் கடுமையான ஆயுதங்களை தரித்திருந்தனர்.

இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்று தெரியவில்லை.

ஆனால், தாக்குதலாளிகளில் இருவராவது, ஆப்கான் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தமது பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு கூறியுள்ளது.

தாக்குதல் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொளி.