விரைவில் மலேரியாவுக்கு தடுப்பு மருந்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விரைவில் மலேரியாவுக்கு தடுப்பு மருந்து - காணொளி

மலேரியா நோய்க்கு செயற்திறன் மிக்க ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் தறுவாயில் தாம் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கையாகவே மலேரியா நோயை எதிர்க்கும் சக்தியை உடலில் கொண்டிருக்கும் தன்சானிய நாட்டைச் சேர்ந்த சில குழந்தைகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தடுப்பு மருந்தை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இது சுண்டெலியில் வெற்றிகரமாகச் செயற்பட்டிருக்கிறது.

இந்த மருந்தை கண்டுபிடித்துள்ள ரோட் ஐலண்ட் மருத்துவமனையின் ஆய்வுப் பகுதி இயக்குனரான டாக்டர் ஜேக் குர்தீஸ் அவர்கள், மனிதரில் அந்த மருந்தை பரிசோதிப்பதற்கு முன்னதாக மேலும் சில ஆய்வுகளை செய்ய வேண்டியிருப்பதாகக் கூறியுள்ளார்.

இவை குறித்த ஒலிக்குறிப்பற்ற காணொளி.