'மீனவர் விடுதலையை வரவேற்கிறோம்' - இந்திய மீனவர் அமைப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மீனவர் விடுதலையை வரவேற்கிறோம்' - இந்திய மீனவர் அமைப்பு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யப்போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்ததை, இந்திய மீனவர்களின் தரப்பில், நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான அமைப்பு வரவேற்றிருக்கிறது.

இது குறித்து தமிழோசையிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவரான அருளானந்தம் அவர்கள், இந்திய பிரதமராக பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடி அவர்களின் வித்தியாசமான நடவடிக்கையின் விளைவாக நடக்கும் இது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

அதேவேளை, இந்தியச் சிறைகளில் இருக்கும் இலங்கை மீனவர்களை இந்திய அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கை மீனவர்களுடனான தமது பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கும் விவகாரத்துக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமானால், இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று, மீன்பிடிப்பதற்கான மாற்று வசதிகளை இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் அதற்கு ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அருளானாந்தம் கூறியுள்ளார்.

அவர், தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இங்கு கேட்கலாம்.