மலேசியன் விமானத்தை தேடிய இடம் தவறானதாகும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலேசிய விமானத்தை தேடிய இடத்தில் அது இல்லை - காணொளி

காணாமல் போன மலேசியன் ஏர் லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடக்கும் இடம் என நம்பப்பட்ட இடம், அந்த விபத்து நடந்த இடம் அல்ல என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து சமிக்ஞைகள் வந்ததாக கூறப்பட்ட இடத்தில் தேடிய சிறிய நீர்மூழ்கி ஒன்று தற்போது அதனது கப்பலுக்கு திரும்பிவிட்டது.

அந்த சமிக்ஞை, தேடும் கருவிகள் அல்லது கப்பலில் இருந்து வந்திருக்கலாம் என்று அமெரிக்க கடற்படையின் கடல் பொறியியல் துறையின் துணை இயக்குனர் மைக்கல் டீன் அவர்கள் சிஎன்என் ஊடகத்துக்கு கூறியுள்ளார்.

இதன் அர்த்தம் என்னவென்றால், தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் எங்கு இருக்கின்றன என்பது தெரியாது என்பதாகும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இவை குறித்த ஒலிக்குறிப்பற்ற காணொளி.