உலக கோப்பை போட்டிகளுக்கு எதிரான போராட்டங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலக கோப்பை போட்டிகளுக்கு எதிரான போராட்டங்கள் - காணொளி

பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆரம்பமாக இன்னமும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அங்கு அந்த போட்டிகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பிரேசிலின் தற்போதைய முன்னுரிமை பொதுமக்களுக்கான வீடமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களே அன்றி கால்பந்து போட்டி அல்ல என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

தலைநகர் பிரசிலியாவில் போராட்டம் நடத்திய பழங்குடியின மக்கள் மீது போலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்தார்கள்.

அவர்கள் போலிஸ்காரர்கள் மீது கற்களை வீசினார்கள். அங்குள்ள தேசிய விளையாட்டரங்கை நோக்கி ஆர்ப்பாட்டக்க்காரர்கள் செல்ல முயற்சித்தார்கள்.

தமது நிலவுரிமை கோரி பழங்குடியினர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள்.

இவை குறித்த காணொளி.