சீனாவின் இன்றைய இளைஞர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனாவின் இன்றைய இளைஞர்கள் - காணொளி

சீனாவில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதாக தியனான்மென் சதுக்கத்தில் இராணுவத் தாங்கிகள் உருண்ட தினம் இது.

சிப்பாய்கள் துப்பாக்கியால் சுட்டுத் தீர்த்தனர். அங்கு நடந்த அமைதியான போராட்டத்தை கலைக்கவே இவையெல்லாம் நடத்தப்பட்டன.

கம்யூனிஸ சீனாவில் ஜனநாயக மறுசீரமைப்பை கோரி அவர்கள் நடத்திய அமைதிப் போராட்டம் அன்று சீனா அரசாங்கத்தால், வன்முறை கொண்டு அடக்கப்பட்டது.

இன்று அந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எந்த நிகழ்வும் நடக்கவிடாமல் தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 25 வருடங்களில் அங்கு என்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமது நாட்டை சீனாவின் இன்றைய இளம் தலைமுறை எப்படி பார்க்கிறது என்று பீஜிங்கில் இருந்து ஆராய்கிறார் பிபிசியின் சீன மொழிப் பிரிவின் ஆசிரியர் ஹரி கிரேய்சி.

இவை குறித்த காணொளி.