தி ஷார்ட் கட்டிடத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தி ஷார்ட் கட்டிடத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம் - காணொளி

லண்டனின் மிக உயரமான கட்டிடம் தி ஷார்டின் நிலத்தடித் தளத்தில் புகை கிளம்பியதை அடுத்து அந்த மிகப்பெரிய கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.

7 தீயணைப்பு வண்டிகள் சகிதம் விரைந்த 50 தீயணைப்பு வீரர்கள் புகைக்கான காரணங்களை ஆராய்ந்துவருகின்றனர்.

தீ பற்றியதாக இதுவரை தகவல் இல்லை.

310 மீட்டர் உயரமும் 87 மாடிகளும் கொண்ட இந்தக் கட்டிடந்தான் மேற்கு ஐரோப்பாவில் அதிக உயரமானது.

இது குறித்த ஒலிக்குறிப்பற்ற காணொளி.