ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டில் கலக்கும் தமிழ் அகதிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டில் கலக்கும் தமிழ் அகதிகள் - காணொளி

படகுகளில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் தடுப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் குழு ஒன்று உள்ளூரில் பிரபலமான கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒன்றில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் இவர்கள் வெற்றி பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அனைவரும், அவர்களது விண்ணப்பங்களும், பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகளும் ஆராயப்படும் காலத்தில், கட்டாயமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்ற ஆஸ்திரேலிய கொள்கையின் அடிப்படையில் இவர்கள் அனைவரும் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

வேலை செய்ய முடியாத நிலைமை, அவர்களது தஞ்சக் கோரிக்கை குறித்த முடிவுகளுக்காக காத்திருத்தால், எந்த நேரமும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சுறுத்தல் ஆகியவற்றால் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய மன அழுத்தத்தை குறைக்க கிரிக்கெட் விளையாட்டுத்தான் இவர்களுக்கு உதவியுள்ளது.

சிட்னியில் இருந்து பிபிசியின் பில் மேர்சர் அனுப்பிய காணொளி.