இராக்கில் பதற்றம்: சமாரா வரை முன்னேறிய ஐசிஸ் அமைப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராக்கில் பதற்றம்: சமாரா வரை முன்னேறிய ஐசிஸ் அமைப்பு - காணொளி

இராக்கில் பாதுகாப்பு நெருக்கடி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இஸ்லாமியவாத தீவிரவாதக் குழுவான ஐசிஸ் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றது.

இரண்டாவது பெரிய நகரான மொசூல் செவ்வாயன்று வீழ்ந்ததை அடுத்து, அவர்கள் தெற்கே திக்ரித்தை நோக்கி தற்போது முன்னேறுகிறார்கள்.

அவர்கள் தற்போது சமாராவில் தரித்திருப்பதாக புதிய செய்திகள் கூறுகின்றன. இது தலைநகர் பாக்தாதில் இருந்து இரு மணிநேர தூரத்தில் இருக்கிறது.

கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் மொசூலில் இருந்து வெளியேறியதை அடுத்து மனிதநேய அவசரநிலை குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.

பொதுமக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்றும் இராக்கிய பிரதமர் கேட்டிருக்கிறார்.

பிபிசியின் போல் வுட் அவர்களின் காணொளி.