உலகக் கோப்பை ஆட்டத்துக்காக வீட்டு சோஃபாவுடன் வருபவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகக் கோப்பை ஆட்டத்துக்காக வீட்டு சோஃபாவுடன் வருபவர்கள் - காணொளி

பெர்லினில் இருக்கும் ஒரு விளையாட்டரங்குக்கு உலகக் கோப்பை ஆட்டங்களை பார்ப்பதற்காக வரும் ஜெர்மனிய ரசிகர்கள் தமது வீட்டில் இருந்து சோஃபாவையும் எடுத்து வருமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

வீட்டின் முன்னறையில் இருந்தபடியே தொலைக்காட்சியில் உலகக் கோப்பை ஆட்டங்களை பார்ப்பதுபோல, ஒரு மாபெரும் நிகழ்வை ஒரு விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்வதற்காக இந்த முயற்சி நடக்கிறது.

பிரேசிலுக்கும், குரோசியாவுக்கும் இடையிலான ஆட்டத்தை காண்பதற்காக இங்கு 12,000 பேர் வருவார்கள் என்றும், அவர்கள் சுமார் 3000 சோஃபாக்களை அதற்காக எடுத்து வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவை குறித்த காணொளி.