ஆபத்தை நோக்கிய பாக்தாத் நிலைமை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆபத்தை நோக்கிய பாக்தாத் நிலைமை - காணொளி

இராக்கில் முன்னேறி வருகின்ற இஸ்லாமிய தீவிரவாதிகளான ஐசிஸ் அமைப்பினர், பாக்தாத்துக்கும் அதனைத் தாண்டியும் பெரும் எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

பாக்தாதை காப்பாற்ற தாம் திட்டம் தீட்டுவதாக இராக்கிய அரசாங்கம் வலியுறுத்துகிறது. அதேவேளை ஒரு முக்கிய மதகுரு, பொதுமக்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அந்தக் குழுவால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் ஒட்டுமொத்தப் படுகொலைகள் குறித்து தாம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் கூறியுள்ளார்.

அந்தப் பிராந்தியத்துக்கே இதனால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.