டில்லியில் தானியங்கி நீர் வழங்கும் நிலையம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டில்லியில் தானியங்கி நீர் வழங்கும் நிலையம் - காணொளி

குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க அரசுகள் தண்ணீர் வண்டிகளின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயம்தான்.

ஆனால் புதிய ஒரு முன்முயற்சியாக, வங்கிகளின் ஏடிஎம்களில், ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தி பணம் எடுப்பதைப் போல, தண்ணீர் பூத்துகளில் ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி, தண்ணீர் பெறும் முயற்சியை இந்தியத் தலைநகர் டில்லியின் நிர்வாகம் நகரத்தின் சில பகுதிகளில் தொடங்கியிருக்கிறது.

இவை குறித்து எமது புது டில்லிச் செய்தியாளர் ஜெயக்குமார் சுந்தரபாண்டியன் வழங்கும் காணொளி.