ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவருகிறது"- விக்னேஸ்வரன்

உச்சநீதிமன்ற நீதிபதி நியமனங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தே செய்யப்படும் நிலை நீடிப்பதால், தரப்படும் தீர்ப்புக்கள் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் சாதகமாகவே வருகின்றன என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்படுகிறது என்கிறார் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன். இலங்கையில் நீதித்துறை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது,சிறுபான்மை மக்களின் நிலப் பிரச்சினைகள் குறித்த 2000 வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.