ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகள் 100 பேர் ஆஸ்திரேலியா சென்றனரா?"

ஆஸ்திரேலியாவை நோக்கி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட 153 இலங்கைத் தமிழ் அகதிகளைக் கொண்ட படகு நடுக்கடலில் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டதாக வந்த செய்திகள் குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை தொடர்கையில், தமிழ்நாட்டிலிருந்து ஜூன் மாத மத்தியில் இலங்கைத் தமிழர்கள் சுமார் 100 பேர் வரை காணாமல் போயிருக்கிறார்கள் என்று ஈழ ஏதிலியர் அமைப்பின் தலைவர் எஸ். ஜி.சந்திரகாசன் கூறுகிறார். ஜூன் மாதம் 18ம் தேதிவாக்கிலிருந்து, முகாம்களில் உள்ள சுமார் 57 பேரும், கீழ்ப்புத்துப்பட்டு என்ற கிராமத்தில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்கள் 40 பேரும் காணாமல் போயிருக்கிறார்கள் என்றார் அவர்.