ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழிவின் விளிம்பில் ஆப்ரிக்க யானைகள்

ஆப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை மிகவும் மோசமான அளவுக்குக் குறைந்துவிட்டதாக அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் நடத்திய புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

தந்தத்துக்காக மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 35,000 ஆப்ரிக்க யானைகள் கொல்லப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த சட்டவிரோத யானை வேட்டை தடுத்து நிறுத்தப்படாவிட்டால், இந்த இனமே இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் அழித்தொழிக்கப்பட்டுவிடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆசியாவில் தந்தத்திலான பொருட்களுக்கு இருக்கும் மோகமே இந்தப் பிரச்சினையைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது.