ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழகும் ஆபத்தும் நிறைந்த பாம்பு நடனம்

  • 17 மே 2016

பாம்புக் கடியால் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளது குறித்து இந்தோனேஷியக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Image caption இந்த நடனம் ஆபத்து நிறைந்ததாக இருந்தாலும், வறுமை மற்றும் புகழ் காரணமாக பல இளம் பெண்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்

அங்குள்ள விடுதி ஒன்றில் நாகப்பாம்புடன் இர்மா பூலே எனும் பெண் டாங்டட் எனும் நடனமாடிக் கொண்டிருந்தபோது, அந்தப் பாம்பு அவரது காலில் கடித்துவிட்டது.

எனினும் தொடர்ந்து ஆடிய அவர் மேடையிலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

மேற்கு ஜாவா மாநிலத்திலுள்ள அவரது கிராமத்துக்கு சென்ற பிபிசி அங்கு கிராமப்புற பாடகர்களின் நிலை எப்படியுள்ளது என ஆராய்கிறது.