வியட்நாமில் ஒபாமா: நெருங்கி வரும் இருநாட்டு உறவுகள்?

வியட்நாமில் ஒபாமா: நெருங்கி வரும் இருநாட்டு உறவுகள்?

வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக வலியுடன் கூடிய கசப்புணர்வே இருந்துள்ளது.

அப்படியான சூழலில் கிழக்காசியாவுடன் தொடர்புடைய ஒபாமா வியட்நாம் சென்றுள்ளது குறியீட்டளவில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஒபாமாவின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், இரு நாடுகளும் தம்மிடையேயான புதிய உறவுகளை மேலும் வலுப்படுத்த விரைவாக செயல்படுகின்றன. வியட்நாம் மீதான ஆயுதத்தடையையும் ஒபாமா நீக்கியுள்ளார்.

அமெரிக்காவுடனான போர் என உள்ளூரில் கூறப்படுவது தொடர்பில், ஒவ்வொரு பகுதியிலும் நினைவிடங்கள் உள்ளன. ஆனால் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வியட்நாமில், அண்டை நாடான சீனாவை சமாளிக்க வர்த்தகம், அபிவிருத்தி, இராணுவ ஒத்துழைப்பு ஆகியவையே இன்றையத் தேவையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆனால் வளைந்துகொடுக்காத, சில சமயம் பாதுகாப்பற்று உணரும் வியட்நாமிய அரசோ, மக்களைத் தம்முடன் இணைத்துச் செல்ல பொருளாதார மேம்பாடுகள் மட்டுமே போதாது என்பதை உணரவேண்டும் என்றே தோன்றுகிறது என அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இது குறித்த பிபிசியின் கானொளியை இங்கே பார்க்கலாம்.