ரஷ்ய சிறையிலிருந்த யுக்ரைனிய பெண் விமானி விடுவிப்பு

ரஷ்ய சிறையிலிருந்த யுக்ரைனிய பெண் விமானி விடுவிப்பு

ரஷ்யாவில் இரண்டு ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில், கைது செய்யப்பட்டிருந்த யுக்ரைனிய ஹெலிகாப்டர் பைலட் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யுக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சர்ச்சைகள் உள்ள சூழலில், அவருக்கு ரஷ்யா 22 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.

அவர் 790 நாட்கள் ரஷ்ய சிறையில் இருந்தார்.

ரஷ்யாவுடன் கைதிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பிலான உடன்படிக்கையை அடுத்து நாடியா சவ்சென்கோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தன்மீதான குற்றச்சாட்டை அவர் மறுக்கிறார். நாடியா விடுவிக்கப்பட்டதை அடுத்து, யுக்ரைன் இரண்டு ரஷ்யர்களை விடுவித்துள்ளது.

நாடு திரும்பிய நாடியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த பிபிசியின் கானொளி.