அணுகுண்டு வீசப்பட்ட நகரில் அமெரிக்க அதிபர்

அணுகுண்டு வீசப்பட்ட நகரில் அமெரிக்க அதிபர்

இரண்டாம் உலகப் போர் காலத்தில், அமெரிக்காவால் உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பானிய நகரான ஹிரோஷிமாவுக்கு, பதவியிலிருக்கும் முதல் அதிபராக ஒபாமா விஜயம் செய்துள்ளார்.

அங்குள்ள நினைவிடத்தில் அவர் மலர்வளையம் ஒன்றையும் வைத்தார்.

ஆனால் அவரது பயணம் உணர்வுகளை பிரதிபலிக்கவேயன்றி, மன்னிப்பு கோருவதற்கு அல்ல என்பதில் வெள்ளை மாளிகை தெளிவாக இருந்தது.

ஜப்பானிலுள்ள பலர் அணுகுண்டு வீசப்பட்டது போர் குற்றம் எனக் கருதுகின்றனர். ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்களோ அதுவே இரண்டாம் உலகப் போர் முடிவடையக் காரணம் எனப் பார்க்கின்றனர்.

இது குறித்த பிபிசியின் கானொளி