ஜெர்மனியில் அகதிகளை இலக்கு வைக்கும் கடும்போக்கு இஸ்லாமியவாதிகள்

ஜெர்மனியில் அகதிகளை இலக்கு வைக்கும் கடும்போக்கு இஸ்லாமியவாதிகள்

பயங்கரவாத எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை ஜெர்மனி துவங்கியிருக்கிறது. மற்ற நாடுகளுடனான இரகசிய சேவை ஒத்துழைப்பை மேலும் நெருக்கமாக்குவதும் இதில் ஒன்று.

பலவீனமான நிலையில் உள்ள அகதிகளை கடும்போக்குவாதிகளாக மாற்ற கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் முயற்சிப்பதாக ஜெர்மனியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு ஜெர்மனியும் ஒரு இலக்கு என்றும், அங்கு எந்த நேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.