மீட்கப்படுமா மோசூல் நகரம்?

மீட்கப்படுமா மோசூல் நகரம்?

இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசூல் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் சென்று இன்றோடு இரண்டாடுகள் நிறைவடைகின்றன. அந்நகரை தீவிரவாதிகள் ஒரு வார காலத்துக்கும் குறைவான நாட்களில் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் அதனை மீட்கும் அரசு தரப்பின் முயற்சியோ கடினமாகவே இருந்து வருகிறது. மோசூல் நகரை மீட்பதற்கான இராக்கிய படைநடவடிக்கையின் முன்னேற்றத்தை பார்க்க மோசூலின் புறநகர் பகுதிக்கு பிபிசி சென்றது.