ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னை உயிரியல் பூங்காவில் செயற்கைக் கால் பொருத்தப்பட்ட நட்சத்திர ஆமை

  • 14 ஜூன் 2016

சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கால் ஊனமான நட்சத்திர ஆமைக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நட்சத்திர ஆமை பற்றிய செய்தி தற்போது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிய இனமாக கருதப்படும் இந்த நட்சத்திர ஆமை வகைகளும், அந்த பூங்காவுக்கு வரும் சிறுவர் சிறுமியர்களை அதிகமாக கவர்ந்திழுக்க கூடியவையாக கருதப்படுகிறது.

அந்த ஆமையை கீரிப்பிள்ளை ஒன்று தாக்கியுதில், அந்த ஆமையின் கால் ஊனமாகியுள்ளது.

கால் ஊனமுற்ற அந்த ஆமைக்கு, அந்த பூங்காவின் விலங்கின மருத்துவர் குழுவினர், அதற்கு சக்கர கால் ஆதாரம் ஒன்றை பொருத்தியுள்ளனர்.