ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழ்நாட்டில் பிரபலமாகி வரும் சாலையோர பர்மிய உணவுகள்

  • 20 ஜூன் 2016

பர்மாவுக்கு வணிகம் செய்யச் சென்று, 1960களில் அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளால் தமிழ்நாடு திரும்ப நேரிட்ட பல தமிழர்கள் அவர்களுடன் தாம் பர்மாவில் அனுபவித்த பர்மிய உணவுப் பழக்கவழக்கங்களையும் கொண்டு வந்தனர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி போன்ற நகரங்களில், பர்மாவிலிருந்து நாடு திரும்பிய தமிழர்கள் வாழும் பகுதிகளில் பர்மிய உணவு வகைகளின் விற்பனை அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாகவே இருந்து வருகிறது.

பிரபல பர்மிய சாலையோர உணவு வகைகள் சென்னையின் வீதிகளிலும், தற்போது சாலையோர உணவுகளாக பிரபலமடையத் தொடங்கிவிட்டன.

தவிர சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரக்கூடிய பகுதிகளான மெரினா கடற்கரை போன்ற இடங்களிலும் கூட பர்மிய உணவு வகைகள் விற்கப்படுகின்றன.

இந்த பர்மிய உணவுகள் பர்மாவிலிருந்துதிரும்பிய தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மற்றவர்களும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகவும் மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

( தமிழகத்தின் மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் பற்றிய காணொளித் தொடரின் முதல் பகுதி- தயாரித்து வழங்குபவர் சென்னைச் செய்தியாளர் ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன். இதன் பிற பகுதிகள் விரைவில் பிரசுரமாகும்)