ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜப்பானில் அடைத்து வைக்கப்படும் தஞ்சக் கோரிக்கையாளர்கள்!

சென்ற ஆண்டு ஏழாயிரத்து ஐநூறுபேர் ஜப்பானில் தஞ்சம் கோரினார்கள். அதில் இருபத்தி ஏழு பேரின் மனுக்களே ஏற்கப்பட்டன.

மற்ற நாடுகளில் சுமார் முப்பது முதல் நாற்பது சதவீதமான கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றன. ஜப்பானிலோ வெறும் பூஜ்ஜியம் புள்ளி இரண்டு சதவீதமான தஞ்சக்கோரிக்கைகளே ஏற்கப்படுகின்றன.

ஜப்பான் ஏன் மேலதிக அகதிகளை ஏற்பதில்லை என்று பிரதமர் ஷின்சோ அபேவிடம் கேட்கப்பட்டபோது, ஜப்பான் முதலில் தனது பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவேண்டும் என்று பதில் அளித்தார்.

ஜப்பானில் அகதித்தஞ்சம் கோருவது மிகவும் கடினமான நடைமுறை மட்டுமல்ல இறுதியில் பலரது கோரிக்கைகள் ஏற்க்கப்படுவதில்லை. ஏன் இந்த நிலைமை என்பதை ஆராய்கிறது பிபிசி