ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மிதக்கும் யோகா பயிற்சி முறை

ஐ.நா. மன்றத்தில் இந்தியா முன்வைத்த வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் ஜூன் மாதம் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் சென்ற ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படும் இந்த சர்வதேச யோகா தினம், இந்த ஆண்டும் இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை பரவலாக அனுசரிக்கப்பட்டது.

சென்னையில் இதே யோகா தினத்தை வித்தியாசமாக நடத்த திட்டமிட்ட ஒரு யோகா பயிற்சி குழுவினர், பேடில்போர்டு (Paddle board) என்றழைக்கப்படும் நீரில் மிதக்கும் பலகை மீது யோகா செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த புதியவகை யோகா பயிற்சி முறை அனைவரையும் கவர்ந்திழுக்கும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.