“சங்கிலியில் இரண்டு ஆண்டுகள்” (காணொளி)

“சங்கிலியில் இரண்டு ஆண்டுகள்” (காணொளி)

அல் கயீதா அமைப்பினரால் கடத்தப்பட்டு மூன்று ஆண்டுகளாக பிணைக் கைதியாக இருந்தது பற்றி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகனான அலி ஹைதர் கிலானி முதல் முறையாக பேசியுள்ளார்.

தன்னுடைய தந்தையை பழி வாங்கவே தன்னை கடத்தியதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அலி ஹைதர் கிலானி தெரிவித்தார்.

கடந்த மாதம் நடந்த அமெரிக்க-ஆப்கான் கூட்டு ராணுவ நடவடிக்கையில், ஆப்கான் மாகாணமான பக்டிக்காவில் அலி ஹைதர் கிலானி மீட்கப்பட்டார்.

அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் அல் கயீதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட நேரத்தில் யூசுப் ரஸா கிலானி பாகிஸ்தானின் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.