துருக்கி: தோல்வியில் முடிந்த இராணுவப்புரட்சியின் எதிர்வினைகள்

துருக்கி: தோல்வியில் முடிந்த இராணுவப்புரட்சியின் எதிர்வினைகள்

துருக்கிய அதிபர் எர்துவான் நாட்டின் முழுமையான கட்டுப்பாடு தன் கையில் வந்திருப்பதாக அறிவித்திருக்கிறார். சென்ற வெள்ளியன்று முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சி தோல்வியில் முடிந்ததன் பின்னணியில் இவரது இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. எட்டாயிரம் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். துருக்கிய அரசியலில் எர்துவான், பிளவுபடுத்தும் தலைவராகவே பார்க்கப்படுகிறார். தங்கள் வாழ்வை வளப்படுத்தியவராக அவரது ஆதரவாளர்கள் வாழ்த்தினாலும், அவரது மதசார்பு அரசியல், அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருப்பதாக விமர்சகர்கள் எதிர்க்கிறார்கள்.