கடலில் நீந்தி கிரேக்கம் சென்ற அகதி ஒலிம்பிக்ஸில் பங்கேற்கிறார்

கடலில் நீந்தி கிரேக்கம் சென்ற அகதி ஒலிம்பிக்ஸில் பங்கேற்கிறார்

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் 'அகதிகள் அணி' என்கிற பெயரில் ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொள்ள விருக்கும் அணியின் வீராங்கனை, பதினெட்டு வயது யஸ்ரா மர்தினி. சிரியாவிலிருந்து வெளியேறிய இவர், ஐரோப்பா வருவதற்காக துருக்கியிலிருந்து கிளம்பினார். ஆனால் இவர் வந்த படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. அவரும் அவரது சகோதரியும் கிரேக்கத்தை நோக்கி நீச்சலடித்து சென்று சேர்ந்தார்கள். பல மாதங்களுக்குப்பின் ஜெர்மனியில் உள்ள அவர், ரியோ ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் நம்பிக்கையுடன் உள்ளார்.