ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துருக்கி இராணுவ புரட்சியால் பாதிக்கப்பட்ட ''அப்பாவிகள்''

துருக்கியில் ஒரு இரத்தக்களரியுடனான இராணுவ சதிப்புரட்சி நடந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. அதனை அரசாங்கம் தோற்கடித்ததில் நூற்றுகணக்கானோர் கொல்லப்பட்டனர். நாட்டை விட்டு தப்பித்த மதகுருவான ஃபெத்துல்ல குலென் தலைமையிலான ரகசிய நிறுவனம் தான் இதற்கு காரணம் என அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

பொது வாழ்விலிருந்து அவரது ஆதரவாளர்களை நீக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. குலெனின் ஆதரவாளர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட சிலரை பிபிசி சந்தித்தது. ஆனால் அவர்களோ தமக்கு குலெனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர்.