ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குண்டு மழையின் மத்தியிலும் மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்

இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் இயக்கத்துக்கு எதிராக முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளதாக அதிபர் ஒபாமா கூறியுள்ளார். ஆனால், அந்த அமைப்பு இன்னமும் ஒரு அச்சுறுத்தலே என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சிரியாவில் அலெப்போ நகரம் பெரும் மனிதநேய அவலத்தை சந்தித்துள்ளது. ரஷ்யா ஆதரவுடனான அரசாங்க படைகள் தொடர்ந்தும், கிளர்ச்சிக்குழுக்களுடன் மோதுவதால், நகரின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அலெப்போவில் எஞ்சியிருக்கும் ஒரு மருத்துவரிடம் பிபிசி பேசியது.